செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (00:50 IST)

முதல்வர் ஆக விரும்புகிறேன்: மக்களை சந்திக்க பயணம்: கமல்ஹாசன்

கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதி என்பது கடந்த சில வாரங்களுக்கு முன்பே தெரிந்துவிட்டாலும் இன்று கமல்ஹாசன் தனது வாயால் அதை தெரிவித்துவிட்டார். அதுமட்டுமின்றி மக்களுக்காக முதல்வர் ஆக விரும்புகிறேன் என்றும் விரைவில் மக்களை சந்திக்க பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



 
 
இந்தியா டுடே ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள கமல் கூறியதாவது: அரசியலுக்குள் நுழைவது என்பது முள் கிரீடத்தை தலையில் சுமப்பதற்கு சமமானது. மக்களைப் பொருத்தவரை அவர்களின் பிரச்னைகளை யாரும் கண்டு கொள்வதில்லை என்றே நினைக்கின்றனர். இடது சாரியா, வலது சாரியா அல்லது வேறு சிந்தனையுடையவனா என்பதையெல்லாம் மக்கள் பார்க்கவில்லை.
 
என்னைப் பொருத்தவரை கருப்பு தான் என்னுடைய நிறம். அதில் தான் காவி உட்பட அனைத்து நிறங்களும் உள்ளன. அரசியல் ஒரு புதைகுழி என்பதை மாற்றி அனைவருக்குமானதாக மாற்ற வேண்டும் என்பதே இப்போதைய தேவையாக உள்ளது. 
 
அரசியல்வாதி ஆவதற்கு முன்னர் என்னை நான் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக மக்களை நேரில் சந்திக்க உள்ளேன், என்னுடைய மக்கள் சந்திப்பு பயணத்தை விரைவில் அறிவிப்பேன். 
 
உடனடியாக எந்த மாற்றத்தையும் செய்து விடுவேன் என்று நான் உறுதியளிக்கவில்லை. ஆனால் மாற்றத்திற்காக நான் தலைவணங்கத் தயாராக இருக்கிறேன் என்பதையே சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.