செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: புதன், 22 நவம்பர் 2017 (06:42 IST)

ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு இந்த ஆதாரம் போதுமா? கமல் கேள்வி

உலக நாயகன் கமல்ஹாசன் கட்சி எப்போது ஆரம்பிக்கின்றார் என்று தெரியவில்லை. ஆனால் அவ்வப்போது அரசியல் குறித்த பரபரப்பான டுவீட்டுக்களை வெளியிட தவறுவதில்லை. இதனால் அவருடைய டுவிட்டர் பக்கம் எப்போது சுறுசுறுப்பாக உள்ளது.





இந்த நிலையில் தற்போது அவர் பதிவு செய்த ஒரு டுவீட்டில், 'அறப்போர் இயக்க சகோதரர்களுக்கு நன்றியும், வாழ்த்துகளும். என்னைக் கேள்வியும் ஆதாரமும் கேட்போருக்கு இதுவே போதுமான பதில். மேலும் உள்ளதாம் பல ஆதாரங்கள்.’ என்று கூறியுள்ளார்.

தமிழக அமைச்சர்கள் ஊழல் செய்ததற்கு என்ன ஆதாரம் என்று கேள்விகள் கேட்டு வரும் நிலையில் கமல்ஹாசன் இந்த ஆதாரம் போதுமா? என்றும், இன்னும் ஆதாரங்கள் வெளியே வர காத்திருக்கின்றன' என்றும் கூறியுள்ளார். கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு வழக்கம் போல் அவரது ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.