திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : புதன், 22 நவம்பர் 2017 (22:18 IST)

தனக்குத்தானே பாரதி பட்டம் சூட்டி கொண்ட கமல்ஹாசன்

இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மந்த்ராலயம் சென்ற செய்தி சமூக வலைத்தளங்களில் டிரெண்டுக்கு வந்தபோதே கமலும் ஏதாவது போட்டிக்கு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே இன்று தனது டுவிட்டரில் புரபொல் பிக்சராக தன்னை பாரதியாக உருவகப்படுத்தி கொண்ட புகைப்படத்தை மாற்றியுள்ளார்





இந்த புதிய புகைப்படத்திற்கு கேலியும் கிண்டலுமான கமெண்டுக்கள், அதுவும் அவருடைய டுவிட்டர் பக்கத்திலேயே ஏராளமாக பதிவு செய்யப்படுகின்றன.

இந்த புகைப்படம் குறித்து டுவிட்டரில் ஒருவர் 'பாரதி ஆத்திகன்,பாரதி ஒரு பெண்ணுடன் வாழ்த்தான்,பாரதி.. இன்னும் சொல்வேன்.. கூமுட்டை கமலுக்கும் என் கடவுளுக்கும் உள்ள வேறுப்பாட்டை' என்று கூறியுள்ளார். 'முழுசா கேடுகெட்ட அரசியல்வியாதியாக மாறிய பார்த்தாவை பார்...பாரதியார் வேஷம் போட்ட பார்த்தசாரதி அவர் மாதிரி போராளி ஆகி விடுவாரா' என்று இன்னொருவரும் பதிவு செய்துள்ளனர்.

பாரதி போல கமல்ஹாசனும் புரட்சியை செயலிலும் செய்து காட்டுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்