1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
  4. Jayalalitha wishes sasikala giving flower banner

சசிகலாவிற்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய ஜெயலலிதா....

Jayalalitha
அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவிற்கு, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பூங்கொத்து வாழ்த்து தெரிவிப்பது போல் ஒரு பேனரை அதிமுகவினர் வைத்துள்ளனர்.


 

 
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே அதிமுக பொதுக்குழு இன்று காலை கூடியது. அதில் ஜெ.வின் தோழி சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றினர்.
 
அதன்பின், போயஸ் கார்டன் சென்று, தீர்மானத்தின் நகலை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவிடம் கொடுத்தார். அதை வாங்கிய சசிகலா, அங்கிருந்த ஜெ.வின் உருவப்படத்திற்கு கீழே வைத்து கண்ணீருடன் வணங்கினார். அப்போது அவர் தேம்பி தேம்பி அழுதார். சிறுது நேரம் மவுனமாக ஜெ.வின் படம் அருகிலேயே நின்று கொண்டிருந்தார்.
 
அதன்பின், கழகத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக சசிகலா சம்மதமும் தெரிவித்ததாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.
 
இந்நிலையில், பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், சசிகலாவிற்கு ஜெயலலிதா பூங்கொத்து கொடுப்பது போல் ஒரு பேனரை அதிமுகவினர் உருவாக்கியுள்ளனர்.
 
About Writer
Murugan