திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 30 செப்டம்பர் 2021 (13:05 IST)

தடுப்பூசி பற்றி தப்பா பேசினா வீடியோ நீக்கம்! – யூட்யூப் எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசி குறித்து ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் வைத்து வீடியோ வெளியிட்டால் வீடியோ நீக்கப்படும் என யூட்யூப் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல நாடுகளில் தடுப்பூசி குறித்து பலர் பரப்பி வரும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளால் மக்கள் பலர் தடுப்பூசி போடுவது குறித்து பயம் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது யூட்யூப் நிறுவனம் உலக சுகாதார நிறுவனம்  மற்றும் மருத்துவ அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான மற்றும் பயனுள்ள, தடுப்பூசிகள் குறித்த உறுதிப்படுத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல்களுடன் புதிய மருத்துவ கொள்கைகளை வெளியிட்டுள்ளத்.

மேலும் தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை பரப்பும் வீடியோக்கள் நீக்கப்படும் என யூட்யூப் நிறுவனம் எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டில் தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக 1,50,000 வீடியோக்கள் நீக்கப்பட்டதாக யூட்யூப் தெரிவித்துள்ளது.