1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 29 செப்டம்பர் 2021 (16:28 IST)

கஞ்சா கடத்தியதாக புகார்...பிரபல யூடியூபர்ஸ் வீடுகளில் சோதனை

நாகை மீனவன் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருபவர்களின் வீடுகளில் கஞ்சாவை கடத்தியதாக எழுந்த புகாரின் அடிப்பையில் சோதனை.

தமிழில் ஏராளமான யூடியூப் சேனல்கள் உள்ளன. அதில், மீனவர்கள் கடலில் சென்று மீன்பிடிப்பதை அப்படியே பதிவிட்டு அவர்களின் வாழ்வியலை மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதத்தில் வீடியோக்கள் பதிவிட்டு வருவது நாகை மீனவன் என்ற சேனல்.

இந்நிலையில் இலங்கைக்கு ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சாவை கடத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நாகை மீனவன் என்ற யூடியீப் சேனலில் தொடர்புடைய 50க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.