இங்கிலாந்திலிருந்து 82 நாடுகளுக்கு பரவிய புதிய கொரோனா! – உலக சுகாதார அமைப்பு தகவல்!
இங்கிலாந்திலிருந்து பரவ தொடங்கிய புதிய வீரியமிக்க கொரோனா வைரஸ் இதுவரை 82 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஓராண்டாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து பரவ தொடங்கிய வீரியமிக்க கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது.
இதுகுறித்து தற்போது விரிவான விளக்கம் அளித்துள்ள உலக சுகாதார அமைப்பு இங்கிலாந்து மட்டுமல்லாது வேறு சில நாடுகளிலும் வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி இங்கிலாந்திலிருந்து பரவ தொடங்கிய வீரியமிக்க கொரோனா வைரஸ் இதுவரை 82 நாடுகளில் பரவியுள்ளதாகவும், அதேபோல தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா 39 நாடுகளிலும், பிரேசிலில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா 9 நாடுகளிலும் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.