ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (11:38 IST)

10 மாதங்களுக்குள் இரண்டு முறை பிரசவம்.. மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!

Child

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் 10 மாதங்களுக்குள் இரண்டு முறை பிரசவித்து மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 41 வயது பெண்மணி சரிடா ஹோலண்ட். திருமணமான சரிடா கர்ப்பமடைந்து சில மாதங்கள் முன்னதாக பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். பின்னர் 10 வார இடைவெளியில் சரிடா மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிரசவிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

 

பின்னர் 30 வாரங்கள் கழித்து சரிடாவுக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. 10 மாதத்திலேயே குறை பிரசவத்தில் பிறந்ததால் அந்த குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சரிடா ஹோலண்ட் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த நிலையில், இந்த சம்பவம் பலரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

 

Edit by Prasanth.K