செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (08:33 IST)

கொரோனா எங்கிருந்து வந்தது? WHO வெளியிட்ட தகவல்!

கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்து பரவியிருப்பதற்கு வாய்ப்பில்லை என உலக சுகாதார நிறுவனம் தகவல். 

 
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் வூகான் நகரில் தோன்றியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ், 2020 ஆம் ஆண்டு முழுவதும் உலகையே ஆட்டிப்படைத்தது. சீனாவின் வூகான் நகரில் உள்ள வைரஸ் சோதனை மையத்தலிருந்து கொரோனா வைரஸ் பரவவிடப்பட்டதாக உலக நாடுகள் புகார் தொடுத்தன. 
 
இந்நிலையில் இது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டர். இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, வூகான் நகரில் உள்ள பரிசோதனை மையத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்க வாய்ப்பு இல்லை. 
 
மாறாக இது விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது.