வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2021 (06:50 IST)

சூர்யாவுக்கு கொரோனா பாதிப்பா? டுவிட்டரில் வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல நடிகர் சூர்யாவுக்கு கொரோனா பாதிப்பு என்ற தகவல் டுவிட்டரில் பரவி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து சூர்யாவே தனது டுவிட்டரில் ஒரு ட்வீட்டை பதிவு செய்து விளக்கம் அளித்துள்ளார்.
 
அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ’கொரோனா’  பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும்  உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.
 
சூர்யாவுக்கு கொரோனா பாதிப்பு என்ற செய்தியை நம்பவே முடியவில்லை என்றும் இருப்பினும் அவர் தற்போது நலமுடன் இருக்கிறார் என்ற செய்தி தங்களுக்கு ஆறுதல் அளிப்பதாகவும் திரையுலகினர் கூறிவருகின்றன. குறிப்பாக ஜிவி பிரகாஷ் உள்பட பல திரையுலக பிரமுகர்கள் சூர்யாவின் டுவீட்டிற்கு கீழே கமென்ட் பகுதியில் அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்வதாக கூறி வருகின்றனர்.
 
சூர்யாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு பாதிப்பு என்ற தகவலால் அந்த படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது