செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (16:12 IST)

சூர்யாவுக்குக் கொரோனா தொற்றியது எப்படி? வெளியான ரகசியம்!

நடிகர் சூர்யா தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியிட்ட செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரபல நடிகர் சூர்யாவுக்கு கொரோனா பாதிப்பு என்ற தகவல் டுவிட்டரில் பரவி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து சூர்யாவே தனது டுவிட்டரில் ஒரு ட்வீட்டை பதிவு செய்து விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ’கொரோனா’  பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும்  உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று பரவியதற்கான ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. சூர்யாவின் குழந்தைகள் இப்போது மும்பையில் ஜோதிகாவின் பெற்றோர் வீட்டில் உள்ளனர். அவர்களைப் பார்ப்பதற்காக சூர்யா சென்று வந்தபோதுதான் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும் என சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.