பயங்கர சத்தத்துடன் வெடித்த எரிமலை..
மெக்சிகோவில் நேற்று பயங்கர சப்தத்துடன் எரிமலை வெடித்து 3 கிமீ உயரத்திற்கு புகை எழும்பியது.
மெக்சிகோவின் அமெகமிகா நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள போபோகெட்பெட் என்ற எரிமலை, நேற்று அதிகாலை பயங்கர சத்தத்துடன் வெடித்து எரிமலை குழம்பை கக்கியது. எரிமலை வெடித்ததில் சுமார் 3 கிலோ மீட்டர் உயரத்திற்கு புகை எழும்பியது.
இதனை தொடர்ந்து எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் மக்களை வீடுகளின் ஜன்னல்களை அடைத்து வீட்டிற்குள்ளே இருக்கவும், தங்களின் மூக்கு மற்றும் வாய் பகுதியை துணிகளால் கட்டி எரிமலை சாம்பலில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் எச்சரிக்கப்பட்டது. மேலும் இரண்டாம் கட்ட எச்சரிக்கையான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டது.