அவதார் இயக்குநர் உருவாக்கிய அவதார பென்ஸ் கார்..
ஸ்டியரிங்கே இல்லாத மின்சார காரை, பென்ஸ் கார் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளார் அவதார திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் காம்ரூன்
ஜேம்ஸ் காம்ரூன் இயக்கிய அவதார் திரைப்படத்தில் இடம்பெற்ற கார் போன்றே ஒரு காரை பென்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த காருக்கு VISION AVTR என பெயரிட்டுள்ளது. இந்த காரை பென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜேம்ஸ் காம்ரூன் தயாரித்துள்ளார்.
ஸ்டியரிங்கே இல்லாத இந்த மின்சார ஆட்டொமெட்டிக் காரில் இதயத்துடிப்பு, சுவாசம், இரத்த ஓட்டம் ஆகியவையும் அறிந்துக்கொள்ளலாம். இதை ஒரு முறை சார்ஜ் செய்தாலே 700 கிலோ மீட்டர் தூரம் வர செல்லலாம் என கூறப்படுகிறது.
மேலும் இந்த காரின் பின்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள 33 அசையும் செதில்களும் மல்டி டைரக்ஷனில் இயங்கக்கூடியவை. இந்த கார் தற்போது மின்னணு தொழில்நுட்பக் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் விரைவில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.