1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 ஜனவரி 2025 (17:17 IST)

1500 பேருக்கு பொது மன்னிப்பு.. பதவியேற்ற முதல் நாளில் ட்ரம்ப் அதிரடி உத்தரவு..!

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில் குற்றம், சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 1500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று பதவி ஏற்று கொண்ட நிலையில் அவர் ஒரே நாளில் பல உத்தரவுகளில் கையெழுத்திட்டார். குறிப்பாக முந்தைய அதிபர் ஜோ பைடன் பிறப்பித்த உத்தரவுகளை அவர் ரத்து செய்தார். 
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தை தாக்குதல் நடத்தியதாக 1500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக 450 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய அட்டர்னி ஜெனரலுக்கு அவர் உத்தரவு பரப்பித்துள்ளார். 
 
ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியில் தான் அதிபராக வந்தால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவேன் என்று கூறிய நிலையில் பதவியேற்ற முதல் நாளிலேயே அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்தார் என்ற செய்தி கேட்டதும் டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றம், வெள்ளை மாளிகை உள்பட பல்வேறு பகுதிகளில்  ஆயுதங்களை வைத்து தாக்கினார்கள் என்பதும் இந்த வழக்கில் தான் 1500 பேருக்கு கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran