பரந்தூரை அடுத்து வேங்கை வேல் செல்கிறாரா விஜய்? பரபரப்பு தகவல்..!
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் போராட்டம் செய்து வந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், பரந்தூர் மக்களை சந்தித்தபின் இந்த விவகாரம் தேசிய அளவில் பேசப்படும் முக்கிய பிரச்சினையாக மாறியது. இதையடுத்து, தமிழக அரசே பரந்தூர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை ஆண்டுகளாக ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் சென்ற போது ஏற்படாத திருப்பம், விஜய் பரந்தூருக்கு சென்று வந்ததும் ஏற்பட்டுள்ளது என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பரந்தூரை அடுத்து புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் நேரில் சந்திக்க உள்ளதாகவும், அங்கு குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில், அவர் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
விஜய் வேங்கைவயல் சென்றால், அந்த பகுதி மக்களுக்கும் நியாயம் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Edited by Siva