திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 நவம்பர் 2020 (09:34 IST)

அதிபர் தேர்தல் நடக்குது.. ஆனா அதைப்பத்தி கவலையில்ல! – கூகிளில் அதிகம் தேடியது எதை தெரியுமா?

இன்று அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் அமெரிக்காவே பரபரப்புடன் உள்ள நிலையில் அமெரிக்காவில் கூகிளில் அதிகம் தேடப்பட்ட முடிவுகள் அதிர்ச்சியை அளித்துள்ளன.

அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த முடிவுகளில் தற்போதைய நிலவரப்படி குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் பின் தங்கியுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பல இடங்களில் முன்னனி வகித்து வருகிறார்.

இந்த நிலையில் அமெரிக்கா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை என்ன என்பது குறித்து ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிபெற போவது ஜோ பிடனோ அல்லது ட்ரம்ப்போ, யார் வெற்றி பெற்றாலும் அவர்களது ஆதரவாளர்கள் மது அருந்தி கூடி கொண்டாடுவதே வழக்கம். இதற்காக அருகில் உள்ள மதுபான பார் குறித்து கூகிளில் அதிகமாக தேடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.