ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 3 நவம்பர் 2020 (14:45 IST)

தேர்தலில் யாருடன் கூட்டணி ? கமல்ஹாசன் முக்கிய தகவல்!

நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட கமல்ஹாசன் திமுக, அதிமுக உள்பட எந்த எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக கூறினார். இந்நிலையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் தேர்தலில் கழகங்களுடன் கூட்டணி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

வரும் 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலுக்காக கமல்ஹாசனின்  மக்கள் நீதி மய்யம் கட்சி தயாராகி வருகிறது. இதுகுறித்து அவர், தங்கள் கட்சியின் கொள்கைகளை ஆமோதிக்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்றும் அவர் உறுதியாக சொல்லியிருந்தார்.

ஏற்கனவே திமுகவுடன் கமலஹாசன் கட்சி கூட்டணிக்கு பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிட்டது என்றும் 25 தொகுதிகள் திமுக தர ஒப்புக் கொண்டதாகவும் ஒரு சிலர் வதந்தியை பரப்பி விட்டனர்.

அந்த வதந்தியை தற்போது பொய் என்பதை கமலஹாசனின் அறிவிப்பு முடிவு செய்த நிலையில் இன்று இந்நிலையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் தேர்தலில் கழகங்களுடன் கூட்டணி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் திமுக, அதிமுக, தேமுதிக, அமமுக தவிர இதர கட்சிகளில் அவர் கூட்டணி வைக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.