செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 4 நவம்பர் 2020 (08:00 IST)

கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி எது? பரபரப்பு தகவல்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன 
 
திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து வருகின்றன என்பதும் இன்னொரு பக்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கழகங்களோடு கூட்டணி இல்லை என சமீபத்தில் அறிவித்த கமல்ஹாசன் அவர்கள் காங்கிரஸ், விசிக, பாமக, அமமுக உள்பட ஒரு சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது
 
மேலும் சென்னையை பொருத்தவரை கமலஹாசனின் கட்சிக்கு ஓரளவு செல்வாக்கு இருப்பதாக தனியார் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு ஒன்று கூறுகிறது. எனவே சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் குறிப்பாக மயிலாப்பூரில் கமலஹாசன் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதற்காக மயிலாப்பூர் தொகுதியில் சிறப்பு பிரச்சாரம் செய்ய மக்கள் நீதி மய்யம் கட்சியினர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன