புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 ஜூன் 2020 (10:32 IST)

90ஸ் கிட்ஸின் ரெஸ்லிங் வீரர் அண்டர்டேக்கர் விடைபெற்றார்! – ரசிகர்கள் சோகம்!

ரெஸிலிங் போட்டிகளில் ஜாம்பவானாக விளங்கிய ரெஸ்லிங் வீரர் அண்டர்டேக்கர் போட்டிகளிலிருந்து ஓய்வுய் பெறுவதாக அறிவித்துள்ளார்.

90களில் இருந்து இன்று வரை உலகம் முழுவதும் ரெஸ்லிங் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பெற்றவர் டெட்மேன் அண்டர்டேக்கர். மார்க் வில்லியம் காலவே என்ற தனது பெயரைஉ ரெஸில்ங்கிற்காக அண்டர்டேக்கர் என மாற்றி கொண்டார். 90களில் வாழ்ந்த சிறார்கள் அண்டர்டேக்கருக்கு ஏழு உயிர் இருப்பதாகவும், அவரை எத்தனை முறை கொன்றாலும் திரும்ப உயிரோடு வருவார் என்றும் ஒரு நம்பிக்கை நிலவி வந்தது.

WWF போட்டிகளில் பல பதக்கங்களை வென்ற அண்டர்டேக்கர் தற்போது தனது ஓய்வை அறிவித்துள்ளார். அவருக்கு வயது 55 ஆகிறது. ஓய்வுக்கு பிறகு அமைதியான வாழ்க்கை வாழப்போவதாக அவர் அறிவித்துள்ளார். ஆனாலும், ராக், படிஸ்டா போல அவர் சினிமாவில் நடிக்க வந்தால் பார்க்க ஆவலாய் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.