ரியாலிட்டி ஷோவால் தற்கொலை செய்து கொண்ட வீராங்கனை

hana
sinoj| Last Modified புதன், 27 மே 2020 (21:15 IST)


ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹனா கிமுரா தன் தாயை போல் குத்துச் சண்டையில் பிரபலமானவர். இவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.

இதையெடுத்து ஜப்பானில் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சியான டெரெஸ் ஹவுஸில், ஜப்பான் கலாச்சாரத்தை சேர்ந்த 6 பிரபலங்களுடன் அவர் கலந்து கொண்டார்.

அதாவது பிக் பாஸ் வீட்டைப் போல்  ஒரே வீட்டில் வாழ வேண்டும்.ஆனால் இந்த  நிகழ்ச்சியில் அவர் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தார். பலரும் அவரை விமர்சித்தனர்.இதனால் ஹனா கிமுரா மன உளைச்சலுக்கு ஆளானார்.
 
 22 வயதான ஹனா குமுராவால் இணையதளவாசிகளின் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியவில்லை. அதனால் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :