புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 25 டிசம்பர் 2024 (11:58 IST)

அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம்: கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்..!

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது சமூக வலைதளத்தில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய சமூக வலைதளத்தில் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

நேற்று, பெரியார் நினைவு தினத்தை ஒட்டி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த விஜய், கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி, இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம், நிலைத்து  நீடிக்கட்டும் என்றும், அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் என்றும் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே, தமிழக ஆளுநர் ரவி, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பல அரசியல்வாதிகள் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran