ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 5 நவம்பர் 2018 (20:51 IST)

ஆசிட் வீச்சுக்கு உள்ளான உக்ரைன் செயற்பாட்டாளர் மரணம்

மூன்று மாதங்களுக்கு முன் அமில வீச்சு தாக்குதலுக்கு உள்ளான ஊழலுக்கு எதிரான உக்ரைன் செயற்பாட்டாளர் கடேர்னியா மரணமடைந்தார். கெர்சான் நகரத்தில் ஜுலை 31ஆம் தேதி அவர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 40 சதவீத காயத்திற்கு உள்ளான அவரின் விழிகள் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தது. 

கொலையாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அதிபர் கூறி இருந்தார். ஐந்து பேர் முன்னரே காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர். சிகிச்சையில் இருந்த போது அவர், "நான் மோசமான தோற்றத்தில் இப்போது இருக்கிறேன்.

ஆனால், என்னால் உறுதியாக சொல்ல முடியும் உக்ரைனின் நீதியை விட நான் நன்றாகதான் இருக்கிறேன். யாரும் அதை குணப்படுத்துவதில்லை" என்று குறிப்பிட்டு இருந்தார்.