1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (19:19 IST)

கேரள வெள்ளம்: பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் கனமழை பொழிந்து வருகிறது. கேரளாவில் அணை நிரம்பியதால், அவை திறக்கப்பட்டு கேரளாவே வெள்ளக்காடாய் மாறியுள்ளது. 
ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து, பேருந்து சேவை, வாகனங்கள் செல்லும் வழித்தடம் என்று அனைத்தும் முடப்பட்டுள்ளது. 
 
மக்கள் பலர் தங்கள் வீடு, உடமை அனைத்தையும் இழந்துள்ளனர். சில இடங்களில் மக்கள் தங்கள் உறவுகளையும் இழந்து தவித்து வருகின்றனர். நிலச்சரிவால் மேலும் பல உயிர்கள் மாய்கின்றன. 
 
இந்நிலையில், கேரள முதல்வர் பினரயி விஜயன், 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரள மாநிலம் கடுமையான வெள்ளத்தை சந்தித்துள்ளது. 
 
கேரள மாநிலத்திலுள்ள 80 அணைகளும் நிரம்பியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. 1,500-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 2,23,139 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.
 
அதோடு, உங்கள் உதவி பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீண்டும் உருவாக்க முடியும் என கூறி மக்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.