புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (17:27 IST)

உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார் - ரஷ்யா அறிவிப்பு

உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை குவித்து வந்த நிலையில்     நேற்று அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அதை தொடர்ந்து உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு மழை பொழிய தொடங்கின.

தங்கள்  நாட்டு ராணுவ வீரர்கள்  ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்து. மேலும் அந்நாட்டின் முக்கியமான இணையதங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில்  உலக நாடுகள் யாரும் உக்ரைனுக்கு உதவ முன்வரவில்லை.

 உக்ரைன் –ரஷ்ய போரால் கடும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டு, பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்துள்ளது. தங்கம் விலை உயர்துள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில்,  உக்ரைன் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைகக்கு தயார் என ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:  உக்ரைன் நாட்டை அடக்கும்,உறையில் இருந்து மீட்பதே எங்கள்  நோக்கம். உக்ரைன் ராணுவம் போரஒ நிறுத்தினால்  நாங்களும் பேச்சுவார்த்தைக்குத்தயார் எனத் தெரிவித்துள்ளார்.