புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (09:17 IST)

சுதந்திர தினத்தன்று மாபெரும் தாக்குதல்? – உக்ரைன் அதிபர் மக்களுக்கு எச்சரிக்கை!

ukraine president gift
உக்ரைன் தனது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில் ரஷ்யா பயங்கர தாக்குதலுக்கு தயாராகலாம் என உக்ரைன் அதிபர் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து பல மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இன்னமும் போர் தொடர்ந்து நடந்து வருகிறது. உக்ரைன் தனது சிறிய படையையும், ஐரோப்பிய நாடுகளின் ஆதரவையும் திரட்டி ரஷ்யாவுக்கு எதிராக போராடி வந்தாலும், தொடர்ந்து ரஷ்யா உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றி வருகிறது.

இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் உக்ரைன் வீரர்களும் உயிரிழந்துள்ளனர். உக்ரைனிடமிருந்து ஆக்கிரமித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு ரஷ்ய குடியுரிமை வழங்கும் பணிகளில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஆகஸ்டு 24 அன்று உக்ரைன் தனது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. அதேசமயம் அந்த தேதியில் உக்ரைன் மீது ரஷ்யா மோசமான தாக்குதல்களை நடத்த திட்டமிடலாம் என கணிக்கப்படுகிறது.

இதுகுறித்து நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி “இந்த வாரம் ரஷ்யா அசிங்கமான, கொடூர தாக்குதல் நடத்த திட்டமிடலாம். இதை நாம் அறிந்திருக்கும் நிலையில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.