1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (21:32 IST)

அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபா சார்பில் 75 வது சுதந்திர தின கொண்டாட்டம்

India flag
அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபா  சார்பில் 75 வது சுதந்திர தின கொண்டாட்டம் - மாநிலத்தலைவர் வெங்கடேசன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
 
 
கரூரில் அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் அலுவலகத்தில் நம் இந்திய நாட்டின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டம் நிகழ்ச்சி  நேற்று மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

காந்திகிராமத்தில் உள்ள அலுவலகத்தின் முன்பும், மாவட்ட தலைவர் எஸ்.ரமேஷ் ஆகியோரின் இல்லத்தில் தேசிய கொடியை மாநிலத்தலைவர் வெங்கடேசன், தேசிய பொருளாளர் எல்.ஆர்.ராஜு ஆகியோர் இணைந்து ஏற்றி வைத்தனர். முன்னதாக தேச விடுதலைக்காக போராடிய முண்டாசு கவிஞர் மகாகவி பாரதி அவர்களுடைய திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்