செவ்வாய், 19 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 நவம்பர் 2024 (12:13 IST)

ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி! - அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா!

நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்க அனுமதி அளித்துள்ள நிலையில் இதற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.

 

 

ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2 ஆண்டு காலமாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவளித்து வரும் நேட்டோ அமைப்பை சேர்ந்த நாடுகள், தொடர்ந்து உக்ரைனுக்கு பொருளாதார, ஆயுத உதவிகளை செய்து வருகிறது. அதேபோல சமீபமாக ரஷ்யாவும் தனது படையில் வடகொரிய ராணுவத்தை இணைத்து செயல்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்ற நிலையில், ஜோ பைடனின் பதவிக்காலம் டிசம்பருடன் முடிவடைய உள்ளது. அதனால் உக்ரைன் தனது ஆயுதங்களை ரஷ்யாவிற்கு எதிராக பயன்படுத்துவதில் கூடுதல் சுதந்திரத்தை அமெரிக்கா அளித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்கா அனுமதித்துள்ளது.
 

 

இது ரஷ்யாவை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பேசிய ரஷ்ய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர், அமெரிக்காவின் இந்த அனுமதி எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதாக உள்ளதாகவும், இதனால் போரின் தன்மை இன்னும் மோசமாகும் என்றும் தெரிவித்துள்ளது. டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்ற நிலையில் அவர் ரஷ்யா போரில் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் இந்த அனுமதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K