புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2024 (10:47 IST)

இன்னும் பதவி ஏற்கல.. அதுக்குள்ள ரஷ்யாவுக்கு போன் போட்ட ட்ரம்ப்! - போரை நிறுத்துவாரா?

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு ட்ரம்ப், ரஷ்யா அதிபர் வ்ளாடிமிர் புதினுக்கு போன் செய்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். ட்ரம்ப் மீண்டும் அதிபரானால் சர்வதேச அளவில் பல மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - ஹமாஸ் போர் போன்றவற்றில் சில முக்கிய முடிவுகளை அவர் எடுப்பார் என நம்பப்படுகிறது.

 

வரும் ஜனவரி மாதத்தில்தான் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்க உள்ளார். ஆனால் இப்போதே சர்வதேச செயல்பாடுகளில் அமைதியை பேணும் முயற்சியை ட்ரம்ப் தொடங்கியுள்ளார். சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதினுக்கு, டொனால்டு ட்ரம்ப் போன் செய்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற ட்ரம்ப்க்கு புதின் வாழ்த்துகளை தெரிவித்ததாகவும், அதை தொடர்ந்து ட்ரம்ப், புதினிடம் உக்ரைன் மீதான போர் நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின்றன. தான் அதிபராக பதவிக்கு வந்ததும் நிலையான தீர்வை நோக்கி நகர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நினைப்பதாகவும் அவர் புதினிடம் கூறியுள்ளாராம். பதவியேற்கும் முன்னரே தனது பணியை ட்ரம்ப் தொடங்கி விட்டதாக பலரும் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K