ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 19 நவம்பர் 2024 (16:25 IST)

‘அமரன்’ திரையிட்ட தியேட்டரில் குண்டு வீசிய 3 நபர்கள் கைது: தீவிர விசாரணை..!

நெல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் திரையிட்ட திரையரங்கில் மர்ம நபர்கள் சிலர் குண்டு வீசி தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள அலங்கார் என்ற தியேட்டரில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.
 
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமார் 60 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்ததில் மூன்று நபர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்புடையது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
இந்த குண்டு வீச்சு சம்பவத்தில் ஒருவருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற இருவரிடமும் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. மேலும் இந்த குண்டு வீச்சு சம்பவத்தில்   ஈடுபட்டவர்கள் தனி நபர்களா? அல்லது அமைப்பைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து விசாரணை முடிவில் தான் தெரியவரும் என்று கூறப்பட்டு வருகிறது.
 
 
Edited by Mahendran