வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 19 நவம்பர் 2024 (11:56 IST)

தவெக மாநாடு: உளவுத்துறை போலீசார் தகவல் சேகரிக்கின்றார்களா?

TVK Vijay vs MK Stalin
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு கடந்த மாதம் நடந்த நிலையில், அந்த மாநாடு குறித்து உளவுத்துறை பிரிவு போலீசார் தகவல்களை சேகரித்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இருந்து தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் எவ்வளவு பேர் மாநாட்டில் கலந்து கொண்டார்கள் என்பது குறித்த தகவல் சேகரித்து வருவதாகவும், தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பங்கேற்ற நிர்வாகிகளை உளவுத்துறை பிரிவு போலீஸ் கொண்டு சில முக்கிய தகவல்களை சேகரித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுவரை விஜயகாந்த் முதல் கமல்ஹாசன் வரை எத்தனையோ நடிகர்கள் கட்சியை தொடங்கிய போதிலும், அப்போதெல்லாம் இந்த அளவுக்கு உளவுத்துறை பெரிய அளவில் தகவல்கள் சேகரிக்கவில்லை என்றும், விஜய் ஆரம்பித்த கட்சிக்கு மட்டும் தான் அக்குவேறு ஆணிவேராக தமிழக உளவுத்துறை ரகசியமாக சில தகவல்களை சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் ஒரு கூட்டணியோ அல்லது அதிமுக தலைமையில் தமிழக வெற்றி கழகம் இணையும் கூட்டணியோ அமைந்தால் திமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று கூறப்படுவதை அடுத்து உளவுத்துறை போலீசார் இந்த தகவல்களை சேகரித்து வருவதாக கூறப்படுகிறது.


Edited by Mahendran