1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 22 நவம்பர் 2017 (13:33 IST)

ஹேக்கர்கள் கைவரிசையை ஒப்புக்கொண்ட உபர் நிறுவனம்; அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

உபர் நிறுவனத்தின் 5.7 கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 
அமெரிக்காவின் பிரபல கால் டாக்ஸி நிறுவனமான உபர் உலகம் முழுவதும் அதன் சேவையை வழங்கி வருகிறது. உபர் கால் டாக்ஸி சேவையை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் உபர் நிறுவனத்தின் 5.7கோடி வாடிக்கையாளர்களின் தகவல் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
ஓட்டுநர்கள் மற்றும் பயணம் செய்பவர்கள் என இருதரப்பினரின் தகவல்களும் திருடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உபர் நிறுவனத்தின் தகவல் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டது. அது ஹேக்கர்களின் செயலாக இருக்கலாம் என செய்திகள் வெளிவந்தது. 
 
இந்நிலையில் இந்த திருட்டு இந்த ஆண்டு நடைப்பெற்றுள்ளது என உபர் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல்கள் திருடப்பட்டது முன்னாள் செயல் அதிகாரி ஒருவருக்கு முன்னரே தெரியும் என செய்தியும் வெளியாகியுள்ளது.
 
ஆனால் இந்த தகவல் திருட்டு எப்போது நடைபெற்றது என்பது தொடர்பாக இதுவரை உபர் நிறுவனம் தெரிவிக்கவில்லை. மேலும் வாடிக்கையாளர்கள், தங்கள் பண விவரங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், ஏதேனும் சந்தேகம் எழுந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.