வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2017 (21:49 IST)

பிஎஸ்என்எல் டாப் டக்கர் ரீசார்ஜ் திட்டங்கள்: விவரங்கள் உள்ளே!!

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவில் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் பிஎஸ்என்எல் சிறந்த சலுகைகளின் பட்டியல் இதோ... 

 
பிஎஸ்என்எல் ரூ.97 திட்டம்:
 
பிஎஸ்என்எல் நிறுவனம் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி வைத்து, பாரத் 1 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. 
ரூ. 2,200 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்போனுடன் ரூ.97 ரீசார்ஜ் கிடைக்கிறது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். 
வெளியூர் மற்றும் உள்ளூர் அழைப்புகள் என்ற வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் டேட்டா பார்த் 1 ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
 
பிஎஸ்என்எல் ரூ.186 திட்டம்: 
 
28 ஜிபி தரவுடன் வரம்பற்ற வாய்ஸ் கால் 180 நாட்களுக்கு கிடைக்கிறது. ஆனால் டேட்டா நன்மைகள் வெறும் 28 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். 
இது விளம்பர சலுகை ஆகையால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பிஎஸ்என்எல் ரூ.333 திட்டம்: 
 
ட்ரிபிள் ஏஸ் (அ) எஸ்டிவி என்ற வேரு பெயரகளாலும் அழைக்கப்படும் இந்த சலுகை ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கான சிறந்த தேர்வு.
இந்த திட்டத்தில், நாள் ஒன்றிற்கு 3ஜிபி (சில பகுதிகளுக்கு மட்டும்) அளவிலான அதிவேக டேட்டா, 90 நாட்களுக்கு வழங்கப்படும்.
 
பிஎஸ்என்எல் ரூ.349 திட்டம்:
 
இந்த திட்டத்தின் கீழ் நாள் ஒன்றிற்கு 2.5 ஜிபி அளவிலான டேட்டாவுடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்கப்படுகிறது.
எஸ்டிவி 349 என்றும் இது அழைக்கப்படுகிறது. ப்ரீபெய்ட் திட்டமான இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
 
பிஎஸ்என்எல் ரூ.429 திட்டம்:
 
இந்த திட்டத்தில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் நன்மைகள் 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இது பிஎஸ்என்எல் ரூ.485 திட்டம் போன்றதாகும். 
 
பிஎஸ்என்எல் ரூ.485 திட்டம்:
 
இந்த ரூ.485 திட்டமானது மொத்தம் 90 ஜிபி அளவிலா டேட்டா, உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு வழங்குகிறது.
இலவச ரோமிங் சேவையையும் கொண்டுள்ளது. இந்த திட்டம் 180 நாட்களுக்கு செல்லுபடியாகும்.