திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 22 நவம்பர் 2017 (22:20 IST)

இதுவரை என்னை 5 பேர் காதலித்து ஏமாற்றினர்; ராய் லட்சுமி ஓபன் டாக்

நடிகை ராய் லட்சுமி பேட்டி ஒன்றில், தான் ஐந்து முறை காதலில் தோல்வி அடைந்துள்ளதாக கூறியுள்ளது கோலிவுட்டில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
ராய் லட்சுமி நடிப்பில் உருவாகியிருக்கும் ஹிந்திப் படம் ‘ஜூலி 2’. ராய் லட்சுமிக்கு ஹிந்தியில் அறிமுகமாகும் இந்தப் படத்தை, தீபக் ஷிவ்தாசனி இயக்கியிருக்கிறார். இப்படம் வரும் 24ம் தேதி தமிழிலும் வெளியாகிறது. ராய் லட்சுமி சமீபத்தில்  பேட்டி ஒன்றில், சில நடிகைகளின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது.  இது என் 50வது படம். கதைக்கு தேவைப்பட்டதால் பிகினி டிரெஸ் அணிந்தும், லிப் லாக் மற்றும் டாப்லெஸ் காட்சியிலும்  நடித்திருக்கிறேன். இன்றைய சூழ்நிலையில் பெண்கள் சாதிக்க பல்வேறு தடைகள் இருக்கிறது. பட வாய்ப்புக்காக  'அட்ஜஸ்மென்ட்' செய்வது நடக்கிறது. ஆனால் நான் பட வாய்ப்புக்காக எந்த அட்ஜஸ்மென்டும் செய்தது கிடையாது.
 
காதலை பொறுத்தவரை, 5 பேரை காதலித்து ஏமாற்றப்பட்டிருக்கிறேன். இதுவரை 5 பேரை காதலித்து, எல்லாமே தோல்வியில் முடிந்திருக்கிறது. என் காதலர்களின் பெயர்களை சொல்ல முடியாது. ஒவ்வொரு முறையும் தோல்வி அடையும்போது, என் அறை கதவை பூட்டிக்கொண்டு உள்ளே உட்கார்ந்து அழுது இருக்கிறேன். இவ்வாறு ராய் லட்சுமி கூறினார்.