ஆப்கானிஸ்தானில் டுவிட்டர் முடக்கப்படுமா? முக்கிய அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில் தாலிபான்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பேஸ்புக் பக்கங்கள் முடக்கம் என்றும் அவர்கள் பதிவு செய்த பதிவுகள் அனைத்தும் நீக்கப்படும் என்றும் பேஸ்புக் இன்று காலை தெரிவித்திருந்தது
ஆனால் அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து இயங்கும் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் நலன் மற்றும் அவர்களது பாதுகாப்பு முக்கியம் என்பதால் தகவல் தொடர்புக்கு மிகுந்த பயனளிக்கும் என்பதால் ட்விட்டர் சேவையை தொடர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது
அனைத்து ஆனால் அதே நேரத்தில் அனைத்து பதிவுகளையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகள் செய்தால் கண்டிப்பாக நீக்கப்படும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது