துருக்கியில் நிலநடுக்கம்; வீடுகள் தரைமட்டம்; 18 பேர் பலி
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆனதில்18 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு துருக்கியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், கிழக்கு பகுதியான எலாஸிக் மாகாணம் சிவிரைஸ் நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இடிபாடுகளில் சிக்கிய பலரை மீட்புக்குழுவினர் மீட்டனர். இதில் 18 பேர் பலியானதாகவும், 500 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.