வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 22 ஜனவரி 2020 (20:18 IST)

வானில் தோன்றிய கருப்பு வளையம்.. ஏலியன் வருகையா?? வைரல் வீடியோ

பாகிஸ்தானில் வானில் கருப்பு வளையம் ஒன்று தோன்றிய வீடியோ வைரலாகி வரும் நிலையில் அது ஏலியனின் வருகையா என நெட்டிசன்களால் சந்தேகிக்கப்படுகிறது.

பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் வானத்தில் கருப்பு வளையம் ஒன்று தோன்றி பின்பு 15 நிமிடங்கள் நீடித்து மறைந்ததாக கூறப்படுகிறது. கருப்பு வளையத்தை ஏலியனின் பறக்கும் தட்டு என்று பலரும் கூறிவருகின்றனர்.

இதனை ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இதே போல் 2015 ஆம் ஆண்டு கஜகஸ்தான் நாட்டில் தோன்றியதாக கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் துபாயிலும் தெரிந்ததாக கூறப்படுகிறது.