திடீரென பின்வாங்கிய டிரம்ப்.. மெக்சிகோ மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு..!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மெக்சிகோ மீது 25% வரி விதிக்க முடிவு செய்தார். தற்போது, அந்த வரி விதிப்பை ஒரு மாத காலத்திற்கு நிறுத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர் பின்வாங்கியதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நடைமுறையை அறிவித்தார். அவரது அறிவிப்பு உலகளவில் வர்த்தக போர் ஏற்படும் அச்சத்தை ஏற்படுத்தியது என்றும் கூறப்பட்டது.
மேலும், மெக்சிகோ பிரதிநிதிகள் அமெரிக்காவுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அமெரிக்க - மெக்சிகோ எல்லைக்கு 10,000 அனுப்புவதாக மெக்சிகோ ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
இந்த நிலையில் மெக்சிகோ மற்றும் அமெரிக்க உறவு மற்றும் இறையாண்மைக்கு அதிபர் டிரம்ப் நல்ல மரியாதை கொடுத்தார் என மெக்சிகோ அதிபர் பாராட்டு தெரிவித்தார்.
Edited by Siva