கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்ல விதிமுறைகள்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
கால்நடைகளை லாரிகள் மூலம் கொண்டு செல்லும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை சென்னை உயர்நீதிமன்றம் வகுத்து, இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
கால்நடைகளை லாரிகளில் கொண்டு செல்லும் போது, அவை நிற்க போதுமான இடவசதி இருக்க வேண்டும். முறையான காற்று வசதி, உணவு, குடிநீர் ஆகியவை கால்நடைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் விதிமுறைகள் குறிப்பிடுகின்றன.
மேலும், கால்நடைகள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை மருத்துவ பரிசோதனை செய்த பிறகே லாரிகளில் கொண்டு செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறையான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே கால்நடைகளை லாரிகளில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
கேரளாவுக்கு கடத்தப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட 117 கால்நடைகளை ஒப்படைக்க கூடிய வழக்கில், இந்த விதிமுறைகளை உயர்நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறிய மனுவையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran