செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 பிப்ரவரி 2025 (12:49 IST)

இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் காஞ்சிபுரத்தில்! யாரெல்லாம் பங்கேற்கலாம்?

Army recruitment camp

காஞ்சிபுரத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் ஆண்டுதோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் பிப்ரவரி 6ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடைபெற உள்ளது.

 

இந்திய ராணுவத்தின் அக்னிவீர் திட்டத்தில் பணியில் சேர விண்ணப்பித்துள்ள 12 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இந்த ராணுவ முகாமில் பங்கேற்று தங்களது தகுதிகளை நிரூபிக்க வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்லாது தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திராவை சேர்ந்தவர்களும் இந்த முகாமில் கலந்து கொள்கின்றனர்.

 

அக்னிவீர் டெக்னிக்க, அக்னிவீர் ட்ரேட்ஸ்மேன், சிப்பாய் பார்மசி, சோல்ஜர் டெக்னிக்க, நர்சிங் அசிஸ்டெட்ண்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான ஆட்சேர்ப்பு இந்த முகாமில் நடத்தப்பட உள்ளது. இந்த ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள இந்திய ராணுவத்தின் வலைதளத்தில் பதிவு செய்தவர்கள், குறிப்பிடப்பட்ட அனைத்து சான்றிதழ்களையும் கொண்டு வருவது அவசியம்.

 

Edit by Prasanth.K