அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரி.. பதிலடி கொடுத்த கனடா, மெக்சிகோ.. வர்த்தக போரா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்த நிலையில், கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரி விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக கனடா, மெக்சிகோ, சீனா நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பதிலடியாக கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரி விதித்துள்ளது.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு மாறி மாறி அதிக வரி விதித்து வருவது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, அமெரிக்காவின் அண்டை நாடுகள் உன்னிப்பாக இந்த விஷயத்தை கவனித்து வருவதாகவும் எந்த நேரத்திலும் அந்த நாடுகளுக்கும் இதே போன்ற நிலைமை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இது ஒரு தேவையில்லாத வர்த்தக போரை உருவாக்குகிறது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எந்த ஒரு விஷயத்தையும் ஆழ்ந்து யோசித்து செயல்பட வேண்டும் என்றும் பொருளாதார அறிஞர்கள் கருத்து கூறி வருகின்றனர். கூடுதல் வரி விதிப்பால் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களையும், போதை பொருள் கடத்தலையும் தடுக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
Edited by Siva