அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து? 104 பயணிகள் கதி என்ன?
அமெரிக்காவில் கடந்த சில நாட்களில் இரண்டு விமான விபத்துக்கள் ஏற்பட்டு பெரும் உயிர் சேதங்கள் ஏற்பட்ட நிலையில், இன்று ஓடுதளத்தில் சென்ற விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் பயணிகள் அச்சமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் விமான நிலையத்தில் 104 பயணிகளுடன் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த போது அதன் இறக்கையில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள், "விமானத்தை தரையிறக்கவும், எங்களை உடனே வெளியேற்றவும்" என்று அலறி அடித்தனர். இதையடுத்து, விமானம் டேக் ஆஃப் செய்வது ரத்து செய்யப்பட்டு, அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர், மேலும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. விமானத்தில் ஏற்பட்ட தீயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்ததால், ஒரு பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த தீ விபத்து நடுவானில் ஏற்பட்டிருந்தால், பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து இரண்டு விமான விபத்துக்கள் நடந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது என்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva