திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 27 நவம்பர் 2019 (16:38 IST)

மோப்ப நாய்க்கு விருது வழங்கிய அமெரிக்க அதிபர்..

ஐ.எஸ். பயங்கரவாத தலைவன் அபுபக்கர் பாக்தாதி தற்கொலை செய்ய உதவிய மோப்ப நாய்க்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விருது வழங்கியுள்ளார்.

ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவர் அபுபக்கர் பாக்தாதி சிரியாவில் பதுங்கி இருந்ததாக கிடைத்த தகவலை அடுத்து அமெரிக்க ராணுவத்தினர் பாக்தாதியை கண்டுபிடிக்க புறப்பட்டனர். அப்போது ராணுவத்தினருடன் சென்ற கோனன் என்ற மோப்ப நாய், பாக்தாதியை இருப்பிடத்தை கண்டுபிடித்து விரட்டி சென்றது.

பின்பு பாக்தாதியை சுற்றிவளைத்தனர் அமெரிக்க படையினர். ஆனால் பாக்தாதி தன்னுடன் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தில் கோனான் மோப்ப நாய்க்கு காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாக்தாதியை விரட்டியடித்து தற்கொலை செய்ய தூண்டிய நாய் என அமெரிக்க அதிபர் கோனானை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து விருது வழங்கி கௌரவப்படுத்தினார். மேலும் நிரூபர்களிடம் பேட்டியளித்த ட்ரம்ப், உலகிலேயே கோனன் தான் சிறந்த மோப்ப நாய் என பெருமையுடன் கூறியுள்ளார்.