1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Isro satellite launching 26 hours countown start

அமெரிக்கா – இந்தியா சேர்ந்து அனுப்பும் செயற்கைக்கோள்! – கவுண்டவுன் தொடங்கியது!

ISRO
இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் பி.எஸ்.எல்.வி சி47 ராக்கெட்டுக்கான 26 மணி நேர கவுண்டவுன் தொடங்கியுள்ளது.

இஸ்ரோ பூமி குறித்த ஆராய்ச்சிகளுக்காக ”கார்ட்டோசாட்” எனப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தி வருகிறது. இதுவரை 8 கார்ட்டோசாட்டுகள் செலுத்தியுள்ள நிலையில் ஒன்பதாவது கார்ட்டோசாட் நாளை விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

இந்த கார்ட்டோசாட் செயற்கைக் கோளுடன் அமெரிக்காவின் நானோ சேட்டிலைட்டும் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. கடந்த 25ம் தேதியே இந்த செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. சில தொழில்நுட்ப காரணங்களால் தேதி மாற்றப்பட்டு 27ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பொங்கல் பரிசு 1000 ரூபாய்! – முதல்வர் அறிவிப்பு!