228வது நாளில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 227 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று பார்த்து வருகிறோம்
அந்தவகையில் 228-வது நாளான இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது
நாடு முழுவதும் கடந்த 7 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருக்கும் நிலையில் பட்ஜெட்டுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva