1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 ஜனவரி 2023 (11:30 IST)

சென்னை மெரினா - பெசண்ட் நகர் இடையே ரோப்கார்: தொடங்கியது ஆய்வுப்பணி!

rope car
சென்னை மெரினாவில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை வரை ரோப்கார் அமைக்க ஆய்வு பணிகள் தொடங்கி உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் இடையே 4.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோப்கார் சேவை அமைக்க வேண்டும் என சென்னை மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இது குறித்து பல ஆய்வுகள் நடைபெற்றாலும் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் இடையே அமைக்கும் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தொடங்கியுள்ளது
 
இந்த ஆய்வு பணிக்கு பின் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் இடையே ரோப்கார் அமைக்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran