1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. வேளாண்மை
Written By Siva
Last Updated : செவ்வாய், 3 ஜனவரி 2023 (10:05 IST)

ஒரு கிராம் ரூ.5200ஐ நெருங்கிய தங்கம் விலை: ரூ.6000 விரைவில் என தகவல்!

gold
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு கிராம் தங்கம் 4200 முதல் 4300 வரை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது ஒரு கிராம் தங்கம் 1200 ரூபாய் நெருங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 41 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5191.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 328 உயர்ந்து ரூபாய் 41528.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5593.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 44744.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 100 காசுகள் உயர்ந்து ரூபாய் 75.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 75500.00 எனவும் விற்பனையாகி வருகிறது.

Edited by Siva