திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (12:47 IST)

போர் எதிரொலி: ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்க்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தல்

இஸ்ரேலில் போர் தீவிரமடைந்துள்ளதால் ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்க்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜெருசலேம் புனித பயணத்தை பலர் தொடர்ந்து வரும் நிலையில் இந்த ஆண்டு போர் நடந்து வருவதால் ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேலில் உள்ள தமிழர்கள் பாதுகாப்புடன் உள்ளனர் என்றும், போர் முடிவுக்கு  வந்து இயல்பு நிலை திரும்பியதும் தூதரகம் மூலம் தமிழர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலில் உள்ள தமிழர்கள் 30 பேரை தொடர்பு கொண்டு பேசியதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva