திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (12:40 IST)

இஸ்ரேல் படையின் தளபதி உயிரிழப்பு: பதிலடியாக ஹமாஸ் உளவுப்பிரிவு தலைவர் வீட்டில் தாக்குதல்

israel -Palestine
இஸ்ரேல்  பாதுகாப்புப் படையின் தளபதி நஹால் படைப்பிரிவின் தளபதி ஜொனாதன் ஸ்டெய்ன்பெர்க் என்பவர் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் பதிலடியாக ஹமாஸ் உளவுப்பிரிவு தலைவர் வீட்டில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
 
ஹமாஸ் உளவுப்பிரிவு தலைவர் வீட்டில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். காசாவில் உள்ள ஹமாஸ் உளவுப்பிரிவு தலைவர் வீட்டில் இஸ்ரேல் ராணுவம்  தாக்குதல் நடத்தியுள்ளது.
 
மேலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள இடம், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் ராணுவ மையமாக செயல்பட்டு வந்ததாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே மேலும் தாக்குதல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் நஹால் படைப்பிரிவின் தளபதி ஜொனாதன் ஸ்டெய்ன்பெர்க் உயிரிழந்த விவகாரத்தில் இஸ்ரேல் கடும் அதிர்ச்சியில் உள்ளது.
 
Edited by Siva