வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (21:43 IST)

வகுப்பறையில் ஆசிரியரை கொன்ற மாணவன்...வாக்குமூலத்தைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சி

பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு கத்தோலிக்க உயர் நிலைப் பள்ளியில், பள்ளி ஆசிரியரை மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் செயிண்ட் ஜீன் டி லுஸ் என்ற கடற்கரை நகரில் அமைந்துள்ளது கத்தோலிக்க உயர் நிலைப் பள்ளி.

இப்பள்ளியில், பல நூறு மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு, பணியாற்றி வரும் ஆசிரியர் ஆக்னஸ் லாஸ்லே(50).

இவர் இன்று வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, அவரை 16 வயது மாணவன் ஒருவன் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

இதில், ரத்த வெள்ளத்தில் ஆசிரியர் அங்கேயே சரிந்து உயிரிழந்தார். அந்த மாணவன் அருகிலுள்ள வகுப்பு ஆசிரியரிம் இதுபற்றிக் கூறி அந்தக் கத்தியைக் கொடுத்திருக்கிறான்.
இதைக்கேட்டு, அதிர்ச்சி அடைந்த அவர், உடனே காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், உயிரிழந்த ஆசிரியரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

அந்த மாணவனை கைது செய்து போலீஸார் விசாரித்தனர். அதற்கு, அந்த மாணவன், தனக்குப் பேய் பிடித்துள்ளதால், இப்படிச் செய்ததாகக் கூறியுள்ளான்.

இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.