திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (00:11 IST)

திருமணத்திற்கு புறம்பான தொடர்பு....பெற்ற மகனை கொன்ற தாய்

மேற்கு வங்கம் மாநிலத்தில் 4 வயது மகனை ஏற்க மறுத்ததால், காதலன் உதவியுடன் பெண் ஒருவர் குழந்தையைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இம்மாநிலத்தின் தெற்கு 24 பர்கானாஸில் 4 வயது மகனை ஏற்க மறுத்ததால், காதலன் உதவ்  உதவியுடன் பெண் ஒருவர் குழந்தையைக் கொன்றார்.

மஃப்பூசா பியாடாய் என்ற பெயருடைய பெண்ணின் காதலன் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காகத் தப்பிச் செல்லும்போது, குழந்தையை அழைத்துச் செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.

அதன்பிறகு, குழந்தையை அப்பெண் அடித்துக் கொன்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தெற்கு 24 பர்கானாஸில் உள்ள குல்தாலி காவல்  நிலையத்திற்கு உட்பட்ட குண்டகாலி என்ற கிராமத்தில் நடந்துள்ளது.

குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மஃப்பூசா பியாடாய் என்ற பெண்ணுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஹோசாய்ன் ஷேக் (31) என்பவருடன் திருமணமான நிலையில்,திருமணத்திற்குப் புறம்பான தொடர்பு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.